புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (22:23 IST)

''பொன்னியின் செல்வன் சினிமாவாகும்'' சுஜாதா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய மணிரத்னம்!

எழுத்துப் பிரம்மா என அழைக்கப்படும்  சுஜாதா கடந்த 2004 ஆம் ஆண்டு கூறியபடி, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

த்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மிகச்சரியாக வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

ஒவ்வொரு காட்சியையும் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ளதுபோல் மணிரத்னம் செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் இந்த படம் அனைத்து வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றும் இந்த படம் தமிழ்சினிமாவின் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

இந்த அளவுக்கு பிரமாண்டமாக ஒரு திரைப்படத்தை மணிரத்னம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு காட்சியையும் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ளதுபோல் மணிரத்னம் செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் ஸ்கிரிப்டாக எழுதி வைத்துள்ளார், அதை அவர் எப்போதாவது படமாக எடுப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என  எழுத்துப் பிரம்மா என அழைக்கப்படும் சுஜாதா தனது  நூலில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, தற்போது, பொன்னியின் செல்வன்  நாவலை இரண்டு பாகமாக மணிரத்னம்  படமாக்கியுள்ளார், இதனால் தமிழ் சினிமாத்துறையினர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.