1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:56 IST)

‘மார்ட்டின் லூதர் கிங்’ ஆன யோகி பாபுவின் மண்டேலா… வெளியான டீசர்!

யோகி பாபு மற்றும் ஷீலா நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மண்டேலா திரைப்படம்  நெட்பிளிக்ஸ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்ற அந்த படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்ற விருதை மடோன் அஸ்வின் பெற்றார்.

இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற கமர்ஷியல் படத்தை இயக்கி ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் பெரும் வெற்றியையும் பாராட்டுகளையும் குவித்த இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தில் யோகி பாபு வேடத்தில் சம்பூர்ணா கணேஷ் நடித்துள்ளார். தமிழில் தயாரித்த சசிகாந்தே தெலுங்கிலும் இந்த படத்தை தயாரித்துள்ளார். பூஜா அபர்ணா இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.