வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:15 IST)

நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட்… தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நான்கு பேருக்கு ரெட்கார்ட் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, தனுஷ்,  அதர்வா என மூன்று நடிகர்கள் மேல் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த ரெட்கார்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த போது சங்கத்தின் பணத்தை முறையாகக் கையாளாத காரணத்தினால் அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம நடந்த கூட்டத்திலும் இந்த நடிகர்கள் மேல் ரெட் கார்ட் விதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.