சர்ச்சைகளையும் பாராட்டுகளயும் பெற்ற மம்மூட்டி-ஜோதிகாவின் ‘காதல்’ ஓடிடியில் ரிலிஸ்!
ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் காதல். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி ரிலீஸானது.
இந்த படம் தன்பாலின ஈர்ப்பு குறித்து சிறப்பாக பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த நடிகரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மம்மூட்டியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்த்துள்ளது. அதே போல ஜோதிகாவின் கதாபாத்திரமும் பாராட்டுகளைப் பெற்றது. அதே நேரத்தில் இந்த படம் சர்ச்சைகளையும் சந்தித்தது.
இந்நிலையில் இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.