திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (09:55 IST)

நெட்பிளிக்ஸில் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்… முதல் இடத்தைப் பிடித்த மம்மூட்டி படம்!

மம்மூட்டி நடிப்பில் உருவான CBI படத்தின் ஐந்தாம் பாகம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவான சிபிஐ திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து பாகங்களாக வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆனது.

இந்நிலையில் கடந்த வாரத்துக்கான இந்திய அளவிலான ட்ரண்ட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ட்ரண்ட்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.