1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (22:49 IST)

இளம் பாடகருக்கு உதவி செய்த நடிகர் கமல்ஹாசன்

kamalhasan
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மா நகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து,  நடிகர் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம்  விக்ரம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி  உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்போதும் வெளி நாடுகள் மற்றும் இந்தியாவில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் படம்.

இப்படத்தில், அனிருத் இசையில், நடிகர் கமல்ஹாசன் எழுதிய பத்தல பதிதல என்ற பாடல் வைரலானது. இப்பாடலை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடி தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இன்று கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் வரவழைத்து பாராட்டினார். அத்துடன், திருமூர்த்தியை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் செய்து, அவரது இசைப் பள்ளியில் அவருக்கு கற்பிக்கவும் அதற்கான செலவைதான் ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.