செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (10:26 IST)

திருமணம் செய்ய வற்புறுத்தி நடிகைக்கு கத்திக் குத்து! பாலிவுட்டில் பரபரப்பு!

பிரபல பாலிவுட் நடிகை மால்வி மல்ஹோத்ரா தயாரிப்பாளர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்தியில் வெளியான உடான் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மால்வி மல்ஹோத்ரா. இவர் அதையடுத்து சில படங்களிலும் நடித்து இப்போது வளரும் நடிகையாக உருவாகி வருகிறார். இந்நிலையில் இவரிடம் சமூகவலைதளங்களின் மூலம் பழக்கமான் குமார் மஹிபால் சிங் என்கிற தயாரிப்பாளர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் மால்வி மறுக்கவே சில நாட்களுக்கு முன்னர் அவரை  வழிமறித்துக் கத்தியால் மூன்று முறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மால்வி இப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.