திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:38 IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடு – தவறி விழுந்த மேக் அப் மேன் மரணம்!

மலையாள சினிமா உலகின் முன்னணி ஒப்பனைக் கலைஞரான ஷபு புல்பள்ளி தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு மேக்கப் மேனாக இருப்பவர் ஷபு புல்பள்ளி. அவர் இப்போது நிவின் பாலிக்கு மேக்கப் மேனாகவும் மேனேஜராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்ட போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்த்திரங்களைக் கட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர் நினைவிழந்தார். அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.