என்னது கல்யாணிசமா? ரொம்ப ஓவரா போறீஙகடா!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சினிமாவில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் காமன் டிபியை உருவாக்கி உள்ளனர்.
இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் முன்னாள் நடிகை டெய்சி ஆகியோரின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் அறிமுகமானார். அவர் தமிழில் ஹீரோ, மாநாடு மற்றும் புத்தம் புது காலை திரைப்படம் ஆகியவற்றில் நடித்துள்ளார். குறைந்த படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அவர்கள் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் இப்போது அவரின் மூன்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரசிகர்கள் அன்பு கொஞ்சம் ஓவராகி “3yearsofkalyaanism” என்று குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அந்த புகைப்படம் மற்றும் அந்த கமெண்ட்டை கேலி செய்து வருகின்றனர்.