வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:45 IST)

மல்லிகா ஷெராத்தின் தமிழ் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

மல்லிகா ஷெராத்தின் தமிழ் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்தநிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ஒன்று தமிழில் தயாராகி வருகிறது. இயக்குனர் வடிவுடையான் என்பவர் இயக்கி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பாம்பாட்டம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இன்று வெளியாகியுள்ள இரண்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மல்லிகா ஷெராவத் உடன் யாஷிகா ஆனந்த், ஜீவன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். பழனிவேல் என்பவர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது