1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (13:04 IST)

சித்தார்த் நடிகைக்கு திடீர் திருமணம்: மனமுடைந்த ரசிகர்கள்!

மலையாள சினிமாவின் வெற்றி படங்களில் ஒன்றான  ‘மகேஷிண்டே பிரதிகாரம்’  படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவரின் நடிப்பு முதல் படத்திலேயே பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழில் சசி இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பிச்சை' படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஜீவி பிரகாஷுக்கு அக்காவாகவும் நடித்து புகழ் பெற்றார். 

இதையடுத்து பல கதை அவரை தேடி வர 'தீதும் நன்றும்' என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது நடிகர் சூர்யாவின்  'ஜெய் பீம்' படத்தின் முக்கிய ரோலில் இவர் நடித்துள்ளார். இதற்கிடையில் திடீரென நேற்றைய முன்தினம் அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பிடித்தமான நடிகையின் திடீர் திருமணத்தை அறிந்து ரசிகர்கள் மன  வருத்தமடைந்துள்ளனர்.