வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (21:21 IST)

மாளவிகா மோகனின் பிறந்தநாள் பரிசு....''தங்கலான்'' படக்குழு ரிலீஸ் செய்த போஸ்டர்

malavika mohanan
நடிகை மாளவிகா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு அவரது போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். சவாலான வேடங்களை ஏற்று நடித்து வரும் அவர் பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின்,  இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில்  'தங்கலான்’ படத்தில்  நடித்து வருகிறார்.  இப்படத்தில் பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தனங்கலான் படத்திற்கான படப்பிடிப்பு  மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

சமீபத்தில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

 இந்த நிலையில்,  இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரடெக்சன் பணிகள் 6 மாத காலம் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு   இன்று தங்கலான் படக்குழு அவரது போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.