திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (18:29 IST)

சிவகார்த்திகேயன் பட நடிகை வாய்ப்பை இழந்தது எப்படி??

சிவகார்த்திகேயன் பட நடிகையின் வாய்ப்பு எப்படி பறிபோனது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.  இப்படத்தை அடுத்து, காக்கிச்சட்டை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து வெள்ளைக்காரத்துரை என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின், தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக ஓரம்கட்டப்பட்டார். கடைசியாக அவர் மருது படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் டைகர் என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.


இந்த நிலையில்,  ஸ்ரீவித்யாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு பறிபோனதற்கு அவரே காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர்களிடம் தனது சம்பளமாக ரூ. 50 லட்சத்திற்கு மேல் கேட்பதாகவும், ஆனால் அவருக்கு அந்தளவு மார்க்கெட் இல்லாத்தால்தால் அத்தனை லட்சம் சம்பளம் கொடுக்க முடியாமல், அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களுடன் தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.