புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:09 IST)

மரியாதையாக பேசுங்கள்; சுஜாவுக்கும் ஆரவுக்கும் இடையே நடக்கும் சண்டை

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. டாஸ்க்கின் பெயர் ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’.  டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். ரெட் பெட்ரூமில் ஒரு லாக்கர் இருக்கும். அதற்கான சாவி லிவிங் ரூமில் இருக்கும்.

 
 
பேய் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த சாவியை எடுத்து அந்த லாக்கரை திறக்கவேண்டும். தேவதை கதாபாத்திரமிட்டவர்கள் லாக்கரை பாதுகாக்கவேண்டும் என்பதுதான் டாஸ்க் ஆகும். டாஸ்க் கொடுத்ததோடு காயப்படுத்தாமல்  விளையாடுங்கள் என்றும் அறிவுரை செய்தார் பிக்பாஸ்.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில், பேய் கதாபாத்திரத்திலிருந்த ஆரவ், ஹரிஷ், ஆரவ், பிந்து இன்று  தேவதையாகவும், தேவதை கதாபாத்திரத்திலிருந்த கணேஷ், சுஜா, சிநேகன் இன்று பேயாகவும் மாறியுள்ளனர். சமீபகாலமாக சிநேகனுக்கும், சுஜாவுக்குமிடையே இருந்து வந்த சண்டை தற்போது, ஆரவுக்கும், சுஜாக்குமாக மாறியுள்ளது. 
 
ப்ரொமோவில், நீ, வா, போ என்று பேசாதீங்க.. மரியாதையாக பேசுங்கள்.. என்று கூறுகிறார் சுஜா, அழைப்பு வந்தவுடன், உள்ளே  இருந்திருக்க கூடாது. ரூல்ஸ்படி வெளியே வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆரவ். இவ்வாறு இருவரும் வாக்குவாதம்  செய்கின்றனர்.
 
இதே நிலை தொடர்ந்தால் சுஜா, கணேஷை தவிர மற்ற போட்டியாளர்கள் யாரையும் விட்டுவைக்கமாட்டார் போல் தெரிகிறது.