வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (18:49 IST)

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி… அடுத்த மாதம் படப்பிடிப்பு!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் மீதான கவனம் மற்ற ஹீரோக்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களே அவரிடம் கதைக் கேட்டுள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் மகிழ்திருமேனியால் விஜய் படத்தை இயக்க முடியவில்லை.

இந்நிலையில் இப்போது உதயநிதிக்காக உருவாக்கிய கதையின் திரைக்கதையை முடித்துள்ள மகிழ் திருமேனி அடுத்த மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.