1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (09:18 IST)

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த மஹிந்த ராஜபக்சே: வைரல் புகைப்படம்!

mahinda
பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த மஹிந்த ராஜபக்சே: வைரல் புகைப்படம்!
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்தப் படம் இதுவரை சுமார் 500 கோடி வசூல் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இந்த படத்தை தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி இந்திய திரையுலக பிரபலங்களும் பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது மனைவியுடன் இலங்கை தலைநகர் கொழும்புவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் வெடித்த போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்த ராஜபக்ச சமீபத்தில் மீண்டும் இலங்கை திரும்பினார். இந்த நிலையில் தற்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படம் பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva