வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (16:14 IST)

மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
 
மாமன்னன் திரைப்படம் வெளியாகி 6 நாள் ஆன நிலையில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்க படுகிறது. கரணம் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு உதயநிதி வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது, அதாவது  இப்படத்திற்காக அவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.