வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:32 IST)

ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் கதாநாயகி ஆகும் தீபிகா படுகோன்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.