திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (21:09 IST)

தர்பார் பட விவகாரம் ... ரஜினி சம்பளம் குறைந்ததா ?

rajikanth salary decreae in the thalaivar 168 film

கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரஜினி காந்த் நடிப்பில் வெளியான தர்பார் முதலில் வசூல் சாதனை என்று தகவல்கள் வெளியானது. பின்னர் தர்பார் பட விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறினார்கள்.  இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இதற்கான படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், தர்பார் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்ததாகவும் அதனால் தலைவர் 168 படத்தில் அவரது முந்தைய படத்தை விட சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.