பிரபல நடிகையை 4வது திருமணம் செய்யும் மகேஷ்பாபு சகோதரர்!
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் பிரபல நடிகையை நான்காவது முறையாக திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் என்பவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை பவித்ரா என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
நடிகை பவித்ரா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இன்னும் அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாததால் இந்த திருமணம் ஒரு சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த திருமணம் குறித்து நரேஷ் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் இருவரும் இணைந்து கோவில்கள் உள்பட ஒருசில இடங்களில் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது