எங்களுக்கு நடுவில் அவன்தான் படுத்து தூங்குகிறான் - மஹத் மனைவி கூறிய ரகசியம்..!

papiksha| Last Updated: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:53 IST)

நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கிடையில் பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதிலிது வந்தார். அதையடுத்து சமீபத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் சிம்பு , அனிருத், பிரேம்ஜி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தனர்.

அப்போது தங்களது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டனர், அப்போது பேசிய பிராச்சி, கோகோ செல்ல நாயை நாங்கள் வளர்த்து வருகிறோம். அது இரவில் நங்கள் தூங்கும்போது எங்களுக்கு நடுவில் வந்து தான் உறங்கும் . மிட் நைட்டில் என் கன்னம் அருகே சூடான காற்று வரும் அது மஹத் என நினைத்து விழித்து பார்த்தால் கோகோவாக இருக்கும். நான் திருமணத்திற்கு முன்பு கோகோவை கட்டிப்பிடித்து தூங்குவேன். இப்போது திருமணம் ஆன பிறகு அது என்னைவிட்டு போகமாட்டேங்குது என கூறி சிரித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :