வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகார முறைகள்...!!

தோஷங்களை போக்கிட உதவும் கடவுள் சிவபெருமான ஆவார். அவரை முறைப்படி வணங்கிடின் எந்த ஒரு தோஷமும் விலகிவிடும். ராமபிரானும் சிவபெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறுகிறது.
இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும். அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும். அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்நிதிகளிலும் ஐந்து எண்ணெய் கொண்டு  இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்யவேண்டும்.
 
அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும். பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்யவேண்டும். அதன் பின்பு எந்த  கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்பவேண்டும். இவ்வாறு 9 அமாவாசைகள் செய்யவேண்டும். இதன் மூலம் பிரம்மஹத்தி  தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும். இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுபினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில்  கிட்டும்.
 
சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலோ அல்லது ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும்  பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆனால் நாம் காணும் ஒரு முக, ஆறுமுக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு  ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
 
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலங்கள் பல உண்டு. அதில் காசி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம், மதுரை, திருவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர் ஆகியன முக்கியமானவை ஆகும்.