1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (09:34 IST)

ஸ்கெட்ச் போட்டுட்டேன், ஜெயிக்காமல் விடமாட்டேன்: மகத் சவால்

நான் ஏற்கனவே ஸ்கெட்ச் போட்டுவிட்டேன், அதனால் ஜெயிக்காமல் விடமாட்டேன் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், மும்தாஜிடம் சவால் விட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தினமும் போட்டியாளர்களுக்குள் சண்டை நடந்து வரும் நிலையில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க், மேலும் அவர்களுடைய சண்டையை அதிகப்படுத்தும் விதமாக உள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மட்டும் அதிகமாகவில்லை என்பது ஒரு சோகமே
 
இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி மும்தாஜ் அணியில் இணைந்திருக்கும் மகத், தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் வெற்றி பெற ஆல்ரெடி ஸ்கெட்ச் போட்டுவிட்டதாகவும், அதனால் இந்த டாஸ்க்கில் ஜெயிக்காமல் விடமாட்டேன் என்றும் மும்தாஜிடம் சவால் விடுகிறார். இதனையடுத்து போட்டியாளர்கள் தங்கள் அணியின் கொடியை வைக்க ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் இடம்பெற்றிருப்பதால் இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.