செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 மே 2020 (17:27 IST)

கொரோனா ஆண்டிபாடி சோதனை! மடோன்னாவுக்கு பாஸிட்டிவ்!

பிரபல பாடகி மடோன்னாவுக்கு கொரோனா ஆண்டிபாடி சோதனையில் பாஸிடிவ் என்று முடிவு வந்துள்ளது.

பிரபல பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான மடோன்னா உலகம் முழுவதும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இசை முகமாக இருந்து வருகிறார். அமெரிக்காவில் பல லட்சம் பேரைக் கொரோனா தாக்கியுள்ள நிலையில் மடோன்னாவுக்கு கொரோனா ஆண்டிபாடி சோதனை நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் பாஸிட்டிவ் என வந்துள்ளது. இதன் மூலம் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபாடி சோதனை என்பது சம்மந்தப்பட்ட நபரின் ரத்தத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் நோய் எதிர்ப்புய் சக்திகள் இருப்பதைக் குறிக்கும் சோதனையாகும்.

பாடகி மடோன்னா இதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.