1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (12:11 IST)

மடோனா செபஸ்டினின் ஓணம் கொண்டாட்டம் - வரலாறு கூறும் பதிவு!

உலகம் முழுக்க உள்ள கேரளா மக்களால் இன்று ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் இந்நன்னாள் கொண்டப்படுகிறது. 
 
கேரள ட்ரடிஷனல் உடை உடுத்தி அத்தப்பூ கோலமிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில் நடிகர் நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நாளை வருடா வருடம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவது உண்டு. 

அந்தவகையில் நடிகை மடோனா செபஸ்டியன் புத்தாடை உடுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, " மயக்கும் பூக்களின் புதிரால் அலங்கரிக்கப்பட்ட இயற்கை தன்னை வெட்கப்படும் ஆண்டின் நேரம் அது. உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் அறுவடையின் உற்சாகத்தைக் கொண்டாட ஒன்றுகூடும் அந்த பிரகாசமான பண்டிகை நேரம் இது. ஒவ்வொரு கேரளக்காரரைப் போலவே, நானும் சிறப்பு உணர்கிறேன்; ஒளிரும் எதிர்காலத்தின் நம்பிக்கையுடன் என் இதயத்தை நிரப்பும் பிரகாசத்தால் ஆச்சரியப்பட்டேன் என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.