வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (11:53 IST)

பிக்பாஸில் இருந்து வெளியேற மதுமிதா முடிவு?

ஜாங்கிரி மதுமிதாவை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெறுக்கின்றனர். 


 
கடந்த ஞாயிற்று கிழமை பாத்திமா பாபு வாசித்த செய்தியில், கவின் - அபிராமி காதல் பற்றியும், முகின் ராவ் - அபிராமிக்கும் பிறந்த குழந்தையாக ஒரு வாட்டர் பாட்டிலை பாவித்த விஷயம் குறித்து விவரிக்கிறார். இதுகுறித்து மதுமிதா ஏன் இதையெல்லாம் சொன்னீர்கள், இதை தமிழ் பெண்ணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு தமிழ் பொண்ணு என்றெல்லாம் பேசாதீர்கள் என்று அபிராமி கத்தி கூச்சலிட வனிதாவும் மதுமிதாவுக்கு எதிராக பேசினார். 
 
இந்த விவகாரத்தால் இரண்டு நாட்களாக அதே பிரச்னையை திரும்ப திரும்ப பேசி மதுமிதாவை குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இந்த விவகாரத்தால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாரும் மதுமிதா பக்கம் பேசாததால் அவர் மிகவும் மனமுடைந்து விட்டார். 
 
இந்த நிலைமை மோசமானால் மதுமிதா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இருந்தாலும் கமல் வந்து இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து கூட்டினால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்.