இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான் - ப்ரோமோ!

Last Updated: திங்கள், 1 ஜூலை 2019 (13:33 IST)
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 
 

 
பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் ஆரம்பமாகியுள்ளது. எனவே இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கன்பெசன் அறைக்கு அழைத்து கேட்டார். 
 
முதலாவதாக சேரன் லெஸ்லியா மற்றும் தர்ஷன் என்று கூறிய அவர் அவர் இருவரும் வீட்டில் எதிலும் பெரிதாக பங்கெடுக்கவில்லை என  கூறினார். அடுத்ததாக சரவணனிடம் கேட்கும்போது சேரன் மற்றும் பாத்திமா பாபுவை சொல்கிறார். சேரன்,  தான் ஒரு இயக்குனர் என்பதை காட்டி டாமினேட் செய்வதாக குற்றம் சுமத்துகிறார் சரவணன். எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருவதோடு அவரவர்களுக்கு பிடித்தவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :