புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:00 IST)

"கேப்டன் பதவிக்காக சீட்டிங் செய்த மதுமிதா" - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான கேப்டன் பதவிக்கான டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது அதில் மதுமிதா, தர்ஷன் , ஷெரின் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்த டாஸ்கில் CAPTAIN என்ற வார்த்தையில் உள்ள எழுத்த்துக்களை பஜர் அழுத்திய உடன் சரியாக கண்ணை மூடிக்கொண்டு பொருத்தவேண்டும். 


 
இந்த டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் சரியான இடம் தெரியாமல் திணறி அங்கும் இங்கும்  தடவி மிகவும் கடினப்பட்டு பொருத்தினர். ஆனால் மதுமிதாவோ மிகச்சரியாக வார்த்தைகளை கொண்டுசென்று அந்த இடத்தில் பொருந்துகிறார். மேலும் தர்ஷரின் கையில் இருந்த C எழுத்தை பிடிக்கிக்கொண்டு ஓடி சென்று பொறுத்தி வெற்றி பெற்றுவிட்டார். 
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளிவர அதனை வித்தியாசமான ஆங்கிளில் உற்றுநோக்கி பார்த்த நெட்டிசன்ஸ் மதுமிதா சீட்டிங் செய்துத்தான் ஜெயித்திருக்கிறார் என்று கூறி திட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த மதுமிதா போக போக அவரே அதை கெடுத்துக்கொண்டார்.