1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (07:56 IST)

மாதவனின் ராக்கெட்ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு… சிறப்புத் தோற்றத்தில் இரண்டு நடிகர்கள்!

மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து காத்திருக்கிறார் மாதவன்.

இந்நிலையில் இந்த படத்தை தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் வாங்கி வெளியிட கமல் உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா ஒரு பத்திரிக்கையாளர் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே கதாபாத்திரத்தில் இந்தியில் ஷாருக் கான் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.