என்னது நான் வில்லனா? ஒரே அடியாய் மறுத்த மாதவன்!
நடிகர் மாதவன் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியை அவர் மறுத்துள்ளார்.
நடிகர் மாதவன் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவராலும் ரசிக்கப்பட்ட சாக்லேட் பாய் நடிகராக மாறினார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான மார்க்கெட் இல்லாமல் போன போது இறுதிச் சுற்று படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அதையடுத்து இப்போது நிசப்தம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் முதன் முதலாக முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இப்போது அவர் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அதை இப்போது மாதவன் தரப்பு மறுத்துள்ளது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.