செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (09:31 IST)

உலகத்திலேயே இங்குதான் முதல்முறை: ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

உலகத்திலேயே திரையரங்குகளுக்கு செல்பவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் இங்குதான் என ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திரையரங்குகள், மால்கள், மார்க்கெட், பொது இடங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் செல்வதற்கு தடுப்பூசி அவசியம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தமிழக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!”