திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (16:33 IST)

30 நாளில் ஓடிடி… 105 நாளில் தொலைக்காட்சி… மாநாடு ஒளிபரப்பு அப்டேட்!

மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமை விஜய் தொலைக்காட்சி வசமும், ஓடிடி உரிமை சோனி லிவ் வசமும் உள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஒரு வாரமாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் மாநாடு படம் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பப் படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சோனி லிவ் தளத்திடம் திரையரங்குகளில் வெளியாகி 30 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தோடு 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதே போல ஓடிடியில் வெளியாகி 75 நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்று 8 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.