செவ்வாய், 4 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (16:27 IST)

மநாடு முடித்த கையோடு அடல்ட் காமெடி படத்தை வெளியிடும் வெங்கட் பிரபு!

இயக்குனர் வெங்கட் பிரபு அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். அடுத்து அந்த படத்தைதான் வெளியிட உள்ளாராம். இந்த படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்த படத்துக்காக புதிதாக போட்டோஷூட் ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.