1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (17:31 IST)

''குரோமாடிக் கிராமாடிக் ''ஆல்பம் ரிலீஸ் செய்யும் லிடியன் நாதஸ்வரம்

lydian nadhaswaram
இந்தியாவின் இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம். இவர் உலகளவில் பிரபலமானவர். இவர் தற்போது இசை ஞானி இளையராஜாவிடம் இசை கற்று வரும் நிலையில்,  விரைவில் தனது இண்டிபென்டன்ட் இசை ஆல்பம் வெளியிடுவதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

உலகளவில் ஜாஸ் இசை ஆல்பம் குறைந்து வருகிறது, எனவே இந்த இசைப்படைப்புக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். உலக இசை தினத்தை முன்னிட்டு வரும் ஜூன்21 ஆம் தேதி குரோமாடிக் கிராமாடிக் என்ற எனது இசை ஆல்பத்தை ரிலீஸ் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.