''பொன்னியில் செல்வன் ''உலகில் வசிக்க விரும்புகளுக்கு ''லைகா''புதிய அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் பட உலகில் வசிக்க விரும்புகளுக்கு ஒரு புதிய அறிவிப்பை பொன்னியில் செல்வன் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்னம் பெரும் பொருட்செலவில் படமாக இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் புரமோசன் வேலைகள் நடந்து வரும் நிலையில், இன்று ஒரு முக்கி அறிவிப்பை பொ.செ-1 படக்குழு அறிவித்துள்ளது. அதில், பொன்னியின் செல்வன் உலகத்திற்குள் நீங்கள் வசிக்க விரும்பினால் பொன்னியில் செல்வன் எழுத்துகள், படங்கள் பெயர்கள், தாங்கிய டீசர்டுகள், காஃபி கோப்பைகள் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியாவதால் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.