1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:09 IST)

100 ஆண்டு தமிழ் சினிமாவில் ‘விக்ரம்’ தான் அதிக வசூல்: திருப்பூர் சுப்பிரமணியன்

vikram audio
100 ஆண்டு தமிழ் சினிமாவில் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் தான் அதிக வசூல் செய்த படம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கோவையில் இன்று ‘விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த விழாவில் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் பேசியபோது 100 ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் ‘விக்ரம்’ படம் தான் என்றும் இந்த படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 இதனை அடுத்து பேச வந்த கமல்ஹாசன் நல்ல சினிமாவை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நல்ல இயக்குனர்கள் உருவாக்குவார்கள் என்றும் நீங்கள் ஆதரித்தால் தான் எங்கள் வீட்டில் பொன்மழை பொழியும் என்றும் அவர் தெரிவித்தார்