1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:09 IST)

நிறைவடையும் நிலையில் லாஸ்லியாவின் ‘ப்ரெண்ட்ஷிப்: வைரல் புகைப்படங்கள்!

நிறைவடையும் நிலையில் லாஸ்லியாவின் ‘ப்ரெண்ட்ஷிப்
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா முதன் முதலில் ஒப்பந்தமான திரைப்படம் பிரண்ட்ஷிப் என்பது தெரிந்ததே. ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் சென்னை அருகே இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. ஹர்பஜன்சிங் லாஸ்லியா மற்றும் கலக்கப்போவது யாரு புகழ் பாலா, சதீஷ் உள்பட பலர் இந்த பாடலில் நடனமாடினர் 
 
இந்த பாடலுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லாஸ்லியாவின் முதல் படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளதை அடுத்து அவரது ஆர்மியினர் குஷியில் உள்ளனர்