புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (13:05 IST)

"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" திரைவிமர்சனம் இதோ!

பியார் பிரேமா காதலை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் ஹாரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம்  ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.  'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடி அந்த படத்தை தொடர்ந்து தற்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
இயக்குனர்:- ரஞ்சித் ஜெயக்கொடி
நடிகர்கள் : – ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சிநாத் மா.க. பா ஆனந்த் , மஞ்சிநாத் பன்னீர் புஷ்பங்கள், லிஸ்லீ ஆண்டனி, திவ்யா பால சரவணன் மற்றும் பலர். 
தயாரிப்பு : – மாதவ் மீடியா 
இசையமைப்பளார் :-சாம் சி எஸ் 
வெளியான தேதி : 15-03-19
 
கதைக்கரு:-  
 
அம்மாவை இழந்த கதாநாயகன் ஹாரிஸ் கல்யாண் விரக்தியில் கோபக்காரனாக சுற்றிவர, அமைதியான மாடர்ன் பெண்ணிடம் காதலில் விழுகிறார். பிறகு தன் கோபத்தை கட்டுப்டுத்தினாரா ? இல்லை கோபத்தால் காதலியையே இழந்தாரா என்பது தான் இப்படத்தின் மையக்கரு. 
 
கதைக்களம்:- 
 
இப்படத்தின் தலைப்பில் இருந்தே இந்த படத்தின் கதை களத்தை நீங்கள் யூகித்திருக்கலாம். ஆம், இது ஒரு வழக்கமான காதல் கதை தான். என்னமோ தெரியவில்லை ஹாரிஸ் கல்யாணுக்கு தொடர்ச்சியாக காதல் படங்களாகவே வந்து அமைகிறது. நிஜத்தில் காதலிக்கிறாரோ இல்லையோ படத்தில் கொடுக்குற கேப்புல நல்லா வாழ்ந்துடுறார். 
 
கௌதம் ( ஹாரிஸ் ) அடிதடி சண்டை என்று முரட்டுத்தனமாக இருந்து வருகிறார். சிறு வயதில் கௌதமின் அம்மா வேறு ஒரு ஆணுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்  அதனை எண்ணி கௌதம் மனதளவில் பாதிப்படைகிறார். 
 
இப்படியே அடிதடி சண்டை என்று போய்கொண்டிருக்கும் கௌதம் வாழ்க்கையில் தாரா (ஷில்பா மஞ்சுநாத்) வருகிறார். ஆனால், இவரோ கௌதமிற்கு நேர் எதிராக மிகவும் மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார். அம்மா பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் தந்தையுடன் வாழ்ந்து வரும் கௌதமின் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்க அதனை பூர்த்தி செய்கிறார் தாரா.  
 
இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துவிடுகிறது. ஆனால், காதலித்து பின்னரும் தனது காதலியிடம் அடிக்கடி கோபப்பட்டுக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்  கௌதம். இப்படியே போய்க் கொண்டிருக்க தங்களது காதலுக்காக வீட்டில் சம்மதம் வாங்க படாதபாடு படுகிறார் தாரா. ஆனால் தனது கோபத்தால் தாராவின் பெற்றோர்களிடமே கெட்ட பேரும் எடுத்துவிடுகிறார் கௌதம். 

 
இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பயங்கர சண்டை ஏற்படுகிறது இருப்பினும் ஒருவரையொருவர் அனுசரித்துக்கொண்டு தங்கள் காதலை தொடர்கிறார்களா?  இறுதியில் கௌதம், தனது கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை. 
 
படத்தின் பிளஸ் : 
 
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பாவின் நடிப்பு அற்புதம். கதாநாயகனை மட்டும் பொருட்படுத்தி காட்டாமல் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது பாராட்டக்கூடியது. சாம் சி எஸ் இசை படத்திற்கு மேலும் காதலை ஊட்டுகிறது. காமெடிய என சொல்லிக்கொண்டு மாகாபா ஆனந்த் , பாலா சரவணன் அடிக்கும் அலப்பறைகள்  எரிச்சலூட்டாமல் இருக்கிறது.
 
 
படத்தின் மைனஸ் : 
 
படத்தின் கதைக்கு தேவைப்படாத சில கட்சிகளால் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் இழுவை சந்திக்கிறது. 
 
இறுதி அலசல் : 
 
தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதையை போன்றே சிறப்பான திரைக்கதை மூலமும் வலுவான கிளைமாக்ஸ் அமைத்து  சமூக அக்கறையுள்ள அட்வைஸ்  மூலம் படத்தை கொடுத்துள்ளார் படத்தின் இயக்குனர்.  வித்தியாசமான காதல் கதை என்பதால் இப்படம்  நிச்சயம் இளைஞர்களை கவரும். 
 
இப்படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு  5.5