செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (19:11 IST)

லோகேஷ் -ரஜினி இணையும் படத்தின் புதிய தகவல்?

rajini - lokesh kanakaraj
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், தற்போது, ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா,  உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்பட்டத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில் காவாலாவை தொடர்ந்து,   நேற்று இரண்டாவது சிங்கில் ரிலீசாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், ரஜினி- லோகேஷ் கனகராஜ் இணையும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.

#ரஜினி171 படம் அடுத்தாண்டு பிப்வரி மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரஜினி திரும்பியதும், டிஜே  ஞானவேல் இயக்கத்தில் #ரஜினி170 வது படத்தில் நடிக்கிறார். எனவும், இதற்கான இடைவேளையில், லியோ பட ரிலீஸ் முடிந்த பின், ரஜினி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் லோகேஷ் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.