திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (09:47 IST)

லோகேஷ் கனகராஜுக்கு விருந்து வைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் வெற்றியால் அனைத்து முன்னணி நடிகர்களாலும் விரும்பப்படும் இயக்குனராக மாறியுள்ளார்.

விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆவலாக உள்ளனர். ஏற்கனவே பிரபாஸ், கமல், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்து அவர் படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை செய்வதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி லோகேஷை அழைத்து அவருக்கு விருந்து கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தன் மகன் ராம்சரணை வைத்து ஒரு படம் இயக்க அந்த விருந்தின் போது பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.