செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (16:20 IST)

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனாவா? விக்ரம் படப்பிடிப்பு நின்ற காரணம்!

விக்ரம் படப்பிடிப்பு சில தினங்களாக சென்னையில் நடந்து வந்த நிலையில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் படக்குழுவை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 7 பேரில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஒருவர் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் இன்னும் உறுதி செய்யவில்லை.