1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (22:07 IST)

விஜய்யின் #லியோ பட ஷூட்டிங் நிறைவு - லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

leo -vijay's 67th film
லியோ படத்தின் முக்கிய அப்டேட்   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை  செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில்   ‘’நா ரெடிதான்’’ என்ற பாடல் வெளியானது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பாடல் சர்ச்சையான நிலையிலும்  டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில்,  இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.  சமீபத்தில்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ''லியோவில்  நடிகர் விஜயின் காட்சிகள்  நிறைவடைந்தது ; மீண்டும் இரண்டாவது முறையாக பயணத்தை சிறப்பாக மாற்றியதற்கு நன்றி அண்ணா'' என்று பதிவிடிருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இது ஒரு சிறந்த அனுபவம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படி, இன்று லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ‘மொத்தம்  மாதங்களில் 12 5 நாட்களில் ’லியோ பட ஷூட்டிங் நிறைவடைந்தது.’ உங்கள் மொத்த உழைப்பையும் இதில் போட்டுள்ளீர்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி.   இந்தப் பயணம் என் இதயத்தில் நெருக்கத்தை உண்டாக்கியுள்ளது.  உங்கள்உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்று தெரிவித்து, படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.