அட்ராசக்க... மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் !
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அந்த வருட தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை , தமன் இசையமைக்கிறார். மடோனா செபாஸ்டியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரலாம்.
இந்நிலையில் தற்ப்போது ஏ. ஆர் முருகதாஸை தொடர்ந்து தனது அடுத்த படமான தளபதி 66 படத்தை லோகேஷ் கனகரராஜ் இயக்கவுள்ளாராம். இந்த படம் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கி அதேபோல் 2022ம் ஆண்டின் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாம். சற்றுமுன் கிடைத்துள்ள இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.