மாநாடு எனப் பெயர் வைத்தது ஏன்? இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கம்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்துக்கு அந்த பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராகி வருகிறது. நேற்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் மொழிகளில் வெளியிட்டனர். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான டெனட்டை போல காட்சிகள் ரிவர்ஸில் செல்லும் வகையில் உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இஸ்லாமிய இளைஞனாக இதில் சிம்பு நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்பு தமிழில் மட்டுமே மாநாடு என்று வைக்கப்பட்டுள்ளதாம், மற்ற மொழிகளில் எல்லாம் ரீவைண்ட் என்ற தலைப்பை வைத்துள்ளனராம். மாநாடு எனப் பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு பேசியுள்ளார். அதில் ஒரு மாநாடுதான் படத்தின் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது. ஒரு மாநாடால் ஒரு ஊர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதே கதை. என்னுடைய படங்களில் இதுவரை செய்யாத சில முயற்சிகளை எல்லாம் செய்துள்ளேன். அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.