விஸ்வாசம் சென்னையில் வெளியாகும் தியேட்டர் லிஸ்ட் இதோ!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம் . இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தூக்குதுரை என்ற கேரக்டரில் நடிக்கும் அஜீத் தனது மகளுக்காக நடத்தும் போராட்டமே படத்தின் பிரதான கதை. இந்த படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் காணப்படுகிறார் . முதல் தோற்றம் நயன்தாராவுடன் டூயட் பாடுவது போன்ற இளமையான தோற்றம். மற்றொரு தோற்றம் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அஜித் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என்று பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். முன்பதிவு ஒரு சில தினங்களில் தொடங்கிவிடும். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்கு முன்பாக போஸ்டர் ஒட்டும் பணிகளில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே சென்னையில் விஸ்வாசம் படம் வெளியாகும் திரையரங்குகளின் லிஸ்ட் உள்ளது.