தூக்குதுரை போஸ்டரில் சாணி: அஜித் ரசிகர்கள் 5 பேர் கைது

Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (21:16 IST)
'பேரு தூக்குதுரை, ஊரு தேனி மாவட்டம் என்ற அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டீசரில் இருந்த வசனம் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தூக்குதுரையின் சொந்த ஊரான தேனியில் இன்று ஐந்து அஜித் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டியில் தான் 'விஸ்வாசம்' படத்தின் கதை நடப்பது போல் உள்ளதால் தேனி மாவட்டம் முழுவதும் அஜித் ரசிகர்கள் 'விஸ்வாசம் படத்தின் போஸ்டர்களை இரவுபகலாக ஒட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் தாங்கள் ஒட்டிய ஒரு போஸ்டரில் தூக்குதுரையின் முகத்தில் சாணி அடிக்கப்பட்டிருந்ததை பார்த்த அஜித் ரசிகர்கள் அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் அஜித் ரசிகர்கள் ஐந்து பேர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :