லிங்குசாமியை புகழ்ந்து தள்ளிய தெலுங்கு நடிகர்!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனி நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது.
இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை இயக்குனர் ராம் பொத்திலேனி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் கதையின் இறுதி வடிவம் முடிந்தது. லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு... விரைவில் கேமராவை ரோல் செய்யலாம் எனக் கூறலாம்.