தனுஷ் நடிப்பில் இதுதான் அதிக பட்ஜெட்… பணத்தைத் தண்ணீராய் செலவு செய்யும் தயாரிபபாளர்!
தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முளா இயக்கும் புதிய படத்துக்கு 120 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.
தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஏற்கனவே பல படங்களைக் கையில் வைத்திருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் கமிட்டாகக் காரணம் இந்த படத்துக்காக மொத்தமாக தனுஷுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதனால்தான் செல்வராகவன் படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை இந்த படத்துக்கு கொடுத்துவிட்டாராம்.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இந்தியாவில் உருவான படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளதாக திரையுலகினர் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.