திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:04 IST)

விஜய் தேவரகொண்டா & மைக் டைசன் நடிக்கும் ‘லைகர்’… தீம் பாடல் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாக உள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய் தேவர்கொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரையும், மிரட்டலான HUNT தீம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.