திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (13:32 IST)

தலைவர் ஆட்டம் ஆரம்பம்! – ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு சினிமா பிரபலங்கள் ட்வீட்!

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கத்துடன் காத்திருந்த நிலையில் பல ஆண்டு மௌனத்தை கலைந்து கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். இதை அவரது தொண்டர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவிற்கு சினிமா துறையினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் “தலைவா… வா தலைவா” என்று உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். இசையமைபாளர் அனிருத் “இனிதான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.